chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

வடிவேலுவின் ரசிகைக்கு கிடைத்த ஆச்சரியம்

In சினிமா செய்திகள்
Updated: 18:08 GMT, Nov 5, 2016 | Published: 17:39 GMT, Nov 5, 2016 |
0 Comments
2080

வைகை புயல் வடிவேலுவை யாராலும் மறக்க முடியாது அந்த அளவுக்கு இவரின் காமெடியை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்காதவர்கள் இருக்க முடியாது அப்படிபட்ட வடிவேலு  திடீரென சினிமாவிலிருந்து காணாமல் போனது அவரின் ரசிகர்களால் தாங்கி கொள்ள முடியாமல் போனதால் இவரின் பிரபலமான வசனங்களை எல்லாம் அவரின் ரசிகர்கள் டப்ஸ்மேஷ் செய்து இணையத்தில் வெளியிட்டு அவர் இல்லாத குறையை போக்கி கொண்டிருந்தனர்.

 அப்படி வடிவேலுவின் ஒரு டயலாக்கை (லேடண்ட்ட பேசறியா ? பின் லேடண் ) டப் ஸ்மேஷ் செய்து உலகம் முழுக்க பிரபலம் அடைந்தவர் இந்த குட்டி பெண் பிரகதி இவர் செய்த அனைத்து வீடியோக்களுமே வடிவேலுவை பற்றி தான் அந்த அளவுக்கு ஒரு தீவிரமான ரசிகையாம் இவர்.

 இவரின் இந்த ஆசையை கண்ட நடிகர் விஷால் இவருக்கு ரசிகையாகவே மாறிவிட்டாராம். அதனால் நேற்று கத்தி சண்டை படத்தின் ஓடியோ விழாவுக்கு இவரை அழைத்து வடிவேலுவுடன் புகைப்படம் எடுக்க வழி செய்துள்ளார்.

 பிரகதி சென்னையில் 11ஆம் வகுப்பு படிப்பவர் அப்பா இன்ஜினியர். அம்மா டொக்டர். அண்ணன் மருத்துவம் படிக்கிறார். இவர் மருத்துவம் படித்துவிட்டு லண்டனில் செட்டில் ஆக போகிறாராம்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*