chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்திய எமி ஜாக்ஸனின் போட்டோ

In சினிமா செய்திகள்
Updated: 10:59 GMT, Nov 2, 2016 | Published: 10:59 GMT, Nov 2, 2016 |
0 Comments
1363

லண்டனிலிருந்து கோடம்பாக்கம் வந்த எமி ஜாக்ஸன் மதராசபட்டினம் படத்தில் ஆர்யா ஜோடியாக நடிக்க தொடங்கி சில படங்களை கடந்த நிலையில் ரஜினி ஜோடியாக 2.0 படத்தில் நடித்து வருகிறார்.

போட்டியை சமாளிக்க வெவ்வேறு யுக்திகளை ஹீரோயின்கள் கடைபிடித்து வருகின்றனர். வில்லங்கமான கருத்து, ஆபாசமான போஸுடன் கூடிய புகைப்படங்கள் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துகின்றனர்.

ஏற்கனவே ராதிகா ஆப்தே டாப்லெஸ் காட்சிகளில் நடித்து சர்ச்சையை கிளப்பிய நிலையில் சில மாதங்களுக்கு முன் டாப்லெஸ் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சைக்குள்ளானார் எமி ஜாக்ஸன். ஏற்கனவே ஜல்லிகட்டு பற்றி எதிர்கருத்து கூறி அந்த பிரச்னையிலும் எதிர்ப்பை சம்பாதித்தார்.

எல்லாம் அடங்கி வேறு பிரச்னைகளுக்குள் ரசிகர்கள் கவனம் செலுத்தத் தொடங்கி இருக்கும் நிலையில் மீண்டும் ஒரு டாப்லெஸ் படத்தை வெளியிட்டிருக்கிறார். இணையதள இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எமி ஜாக்ஸன் ஒன்றிரண்டு தினங்களுக்கு முன் டாப்லெஸ் படத்தை வெளியிட்டு, ‘ஞாயிற்றுகிழமையில் டாப்ஸ் அணிவதற்கு ரொம்பவே சோம்பேறித்தனமாக உள்ளது’ என கவர்ச்சியான வர்ணனையும் கொடுத்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு இது கவர்ச்சி விருந்தாக இருந்தாலும் 2.0 படத்தில் ஹீரோயினாக நடித்து வருவதால் அப்பட இயக்குனர் ஷங்கருக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*