chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தமிழில் நிரந்தர இடத்தைப்பிடிக்க பாடுபடும் பார்வதி நாயர்

In சினிமா செய்திகள்
Updated: 10:26 GMT, Nov 2, 2016 | Published: 10:26 GMT, Nov 2, 2016 |
0 Comments
1292

என்னை அறிந்தால், உத்தம வில்லன் படங்கள் தான் பார்வதி நாயருக்கு தமிழில் ‘விசிட்டிங் கார்ட்’. இப்போது கைவசம் எங்கிட்டே மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக என்று விவகாரமான தலைப்புக்களில் நடிக்கிறார்.

‘தமிழ், மலையாளம் ரெண்டுத்துலேயும் படம் பண்ணுறேன். ஸ்க்ரீன்லே வந்தோம், போனோம்னு இருக்கிறது எனக்குப் பிடிக்காது. ஒரு படத்தில் நடிச்சாலும் என் கேரக்டர் ஆடியன்ஸ் மனசுலே ஆழமா பதியணும்னு விரும்பறேன்.

பார்த்திபன் சாரோட கோடிட்ட இடங்களை நிரப்புக என்னோட ஆர்வத்துக்கு தீனி போடும்னு நம்பறேன். இதில் சாந்தனு ஹீரோ. முக்கியமான கேரக்டரில் சிம்ரன் மேடம் நடிக்கிறாங்க. இதுல எனக்கு மலையாளிப் பொண்ணு வேடம். ஷூட்டிங் ஸ்பாட்டுலே பார்த்திபன் சார் சொல்லுறதை அப்படியே உள்வாங்கிக்கிட்டு நடிக்கறேன்.

எனக்கு வசனம் பேச பிராம்ப்டிங் தேவையே இல்லை. ஒவ்வொரு வசனத்தையும் புரிஞ்சுக்கிட்டுதான் பேசுறேன்’ என்கிற பார்வதி, ஏற்கனவே இங்கே பூ பார்வதி இருப்பதால், தன் அடையாளத்துக்காகத் தான் நாயர் பயன்படுத்துகிறாராம்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*