chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சோனியா அகர்வாலின் புது கவர்ச்சி அவதாரம்

In சினிமா செய்திகள்
Updated: 10:08 GMT, Nov 2, 2016 | Published: 10:06 GMT, Nov 2, 2016 |
0 Comments
2271

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கவர்ச்சியில் தமிழகத்தையே கலங்கடித்த சோனியா அகர்வால், தன்னுடைய இரண்டாவது இன்னிங்ஸை தொடக்கியிருக்கிறார். இப்போது காக்கி உடையை கையில் எடுத்துக்கொண்டு ஆக்ஷனில் அடி பின்னியிருக்கிறார்.

புதுமுகம் சந்தோஷ் கண்ணா நாயகனாக நடிக்கும் சாயாவுக்காகத்தான் சோனியா, போலீஸ் ஆகியிருக்கிறார். ஆனால் ஹீரோயின் இவர் அல்ல. டூரிங் டாக்கிஸ் காயத்ரிதான் நாயகி.

பொதுவா ஆத்மா சம்பந்தப்பட்ட கதைகளில் திகிலும், பயமும் சரிசமமா கலந்திருக்கும். ஆனா, முதன்முறையா ஃபேமிலி ஆடியன்ஸுக்காக ஆத்மாவை மையமா வெச்சி திரைக்கதை பண்ணியிருக்கோம் என்று படத்தின் இயக்குநர் வி.எஸ்.பழனிவேல் தெரிவித்தார்.

சோனியா அகர்வால் விஜயசாந்தி இடத்தை நிரப்பும் அளவுக்கு, நிறைய காட்சிகளில் டூப் வேண்டாம் என அதிரடியாக நடித்து ஸ்டண்ட் மாஸ்டருக்கே டஃப் கொடுத்தார். படப்பிடிப்பு முடிவடைஞ்சி, கிராபிக்ஸ் வேலைகள் நடந்துக்கிட்டிருக்கு. குழந்தைகளை கவர்வதற்காகவே கிராபிக்ஸ் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம் என்கிறார் இயக்குனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*