chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

பேய் பட வரிசையில் வருகிறது “மோ”

In சினிமா செய்திகள்
Updated: 17:47 GMT, Oct 31, 2016 | Published: 17:44 GMT, Oct 31, 2016 |
0 Comments
1285

பல பேய் படங்கள் வரிசையாக வந்து கொண்டிருக்கும் நிலையில் திகிலூட்டும் வகையில் ஜனரஞ்சகமான நகைச்சுவை படமாக வருகிறது “மோ”

இப்படத்தை புவன்.R.நல்லான் என்கிற அறிமுக இயக்குனர் இயக்குகிறார். “காக்கா முட்டை” புகழ் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடிக்கின்றார். சுரேஷ் ரவி, முண்டாசுப்பட்டி புகழ் ராம்தாஸ் (முனிஸ்காந்த்), ரமேஷ் திலக், யோகிபாபு, “கிடாரி” படத்தின் இசையமைப்பாளர் “தர்புகா” சிவா, MIME கோபி ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் நடிகர் செல்வா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.

ஏ.ஆர்.ரகுமானின் உதவியாளரும் இனிமேல் இப்படிதான் படத்தின் இசையமைப்பாளருமான சந்தோஷ் தயாநிதி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளர் பாலசுப்புரமணியனின் துணை ஒளிப்பதிவாளர் விஷ்ணு.ஸ்ரீ.மு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். கோபிநாத் படத்தொகுப்பையும், பாலசுப்புரமணியம் கலை இயக்கத்தையும் மேற்கொண்டுள்ளனர்.

“தி இந்து” நாளிதழின் குடும்பத்தை சார்ந்த ரோஹித் ரமேஷ் “WTF ENTERTAINMENT” என்ற நிறுவனம் மூலம் இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பாளராக G.A.ஹரி கிருஷ்ணன் “MOMENT ENTERTAINMENT” சார்பில் தயாரிக்கின்றார். இப்படத்தை அடுத்த மாதம் நவம்பர் 18 உலகமெங்கும் வெங்கடேஷ் ராஜா “VENKEY’S FILM INTERNATIONAL” நிறுவனம் மூலம் படத்தை வெளியிடுகிறார்.
5mo-1

mo-1

mo-2

mo-6

mo-9

mo-10

mo-11

mo-12

mo-13

mo-74mo-1

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*