chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தல ரசிகர்களின் தீபாவளி கொண்டாட்டம்: யாரோடு தெரியுமா?

In சினிமா செய்திகள்
Updated: 11:32 GMT, Oct 31, 2016 | Published: 11:31 GMT, Oct 31, 2016 |
0 Comments
1428

நேற்று முன்தினம் தமிழகம் முழுவதும் இலட்சக்கணக்கான மக்கள் தீபாவளி திருநாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். ஏல்லோரும் எப்படி எப்படியோ கொண்டாட நம்ம தல ரசிகர்கள் சத்தமில்லாமல் தங்கள் தீபாவளியை கொண்டாடியிருக்கிறார்கள். யாரோடு தெரியுமா?

அஜித் ரசிகர்கள் மதுரையில் மாற்றுத்திறனாளிகளுடன் தீபாவளி திருநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்கள். சிவகாசி, கும்பகோணம், மதுரை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து மதுரையில் உள்ள மாற்றுத் திறனாளிகள் காப்பகத்தில் தீபாவளி திருநாளை கொண்டாடியுள்ளனர்.

இந்த காப்பகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பட்டாசுகள், இனிப்புகள், மதிய உணவுகள் கொடுத்துள்ளனர். மேலும், அவர்களுடன் ஆடி, பாடி அவர்களை மகிழ்ச்சிப்படவும் செய்துள்ளனர். அஜித் ரசிகர்களின் இந்த கொண்டாட்டம் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது.

அஜித் தனது ரசிகர்கள் மன்றத்தை ஏற்கெனவே கலைத்துவிட்டார். இருப்பினும், அஜித் பெயரில் இன்னமும் அவரது ரசிகர்கள் பற்பல உதவிகள் செய்து வருவது இங்கே குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*