chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சூர்யா, விஷால் மற்றும் கார்த்தி வெளியிடும் ‘கடம்பன்’ பெர்ஸ்ட் லுக் மற்றும் டீசர்

In சினிமா செய்திகள்
Updated: 11:27 GMT, Oct 31, 2016 | Published: 11:26 GMT, Oct 31, 2016 |
0 Comments
1601

ஆர்யா தற்போது ‘மஞ்சப்பை’ இயக்குனர் ராகவன் இயக்கத்தில் ‘கடம்பன்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இப்படத்தில் ஆர்யா மலைவாழ் இளைஞனாக நடிக்கிறார் என்றும் இதற்காக தனது உடல் எடையை அதிகரித்து கொண்டு நடித்து வருகிறார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரீன் தெரசா நடித்து வருகிறார். இந்த நிலையில், இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரையும், டீசரையும் படக்குழுவினர் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

அதன்படி, இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணிக்கு இப்படத்தின் டீசரை நடிகர் சூர்யா வெளியிடவிருக்கிறார். அதற்கு முன்னதாக 5 மணிக்கு இப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டரை கார்த்தியும், 5.30 மணிக்கு மற்றொரு போஸ்டரை விஷாலும் வெளியிடவிருக்கின்றனர்.

பெர்ஸ்ட் லுக் போஸ்டரிலும், டீசரிலும் ஆர்யாவின் தோற்றம் எந்த மாதிரி இருக்கப்போகிறது என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*