chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

சிபியுடன் ஜோடி சேரும் ரம்யா நம்பீசன்

In சினிமா செய்திகள்
Updated: 11:20 GMT, Oct 31, 2016 | Published: 11:20 GMT, Oct 31, 2016 |
0 Comments
1302

சிபிராஜ் நடிப்பில் தற்போது ‘கட்டப்பாவ காணோம்’ என்ற படம் உருவாகிவருகின்றது. பட வேலைகள் அனைத்தும் முடிவை நெருங்கியுள்ள நிலையில் ரிலீசுக்கு தயாராக இருக்கிறது.

இந்த நிலையில், சிபிராஜ் தனது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி என்பவருக்கு கொடுத்துள்ளார். இவர் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியிருக்கும் ‘சைத்தான்’ படத்தின் இயக்குனர்.

இப்படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக நடிக்க ரம்யா நம்பீசன் ஒப்பந்தமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. ரம்யா நம்பீசன் நடிப்பில் கடைசியாக வெளிவந்த ‘சேதுபதி’ படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

இவர் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்த ‘புலிமுருகன்’ படமும் பெரிய அளவில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் கொமெடி நடிகர் சதீஷும் நடிக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இப்படம் தெலுங்கில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான ‘ஷனம்’ படத்தின் ரீமேக் என்றும் சினி வட்டாரம் தெரிவித்துள்ளது.

என்ன தான் இருந்தாலும், ரம்யா நம்பீசனின் மார்க்கெட் குறைந்துவிட்டதா அல்லது சிபி ராஜின் மார்க்கெட் உயர்ந்துவிட்டதா என்பது தொடர்ச்சியாக புரியாத புதிராகவே உள்ளது.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*