chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

இயக்குனர்களை தேர்வு செய்வதில் சஸ்பென்ஸ் வைக்கும் – விஜய்

In திரைப்பட பாடல்கள்
Updated: 12:02 GMT, Oct 31, 2015 | Published: 12:02 GMT, Oct 31, 2015 |
0 Comments
1443

விஜய் ‘புலி’ படத்திற்குப் பிறகு அட்லி இயக்கத்தில் நடித்து வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா, எமி ஜாக்சன் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இவருடைய இசையில் ‘செல்லாகுட்டி’ என்னும் பாடலை விஜய் சமீபத்தில் பாடினார்.

பொலிஸ் கதையாக உருவாகும் இப்படத்திற்கு ‘காக்கி’ என தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தையடுத்து தன்னுடைய அடுத்த பட இயக்குனரைத் தேர்வு செய்வதில் விஜய் மிகவும் கவனமாக உள்ளாராம்.

ஏற்கெனவே விஜய்யிடம் சில முக்கிய இயக்குனர்கள் கதையைச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அவற்றில் எதைத் தேர்வு செய்யப் போகிறார் என்பது தான் இன்னும் சஸ்பென்சாகவே உள்ளது.

குஷி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டிருக்கும் எஸ்.ஜே.சூர்யா, சசிகுமார், தனி ஒருவன் படத்தை எடுத்த மோகன் ராஜா, ‘அழகிய தமிழ் மகன்’ படத்தை இயக்கிய பரதன், ‘சிங்கம்’ படத்தை இயக்கிய ஹரி ஆகியோர் விஜய்யிடம் கதை சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.

இவர்களில் யாரை தேர்வு செய்வார் என்று அட்லி இயக்கி வரும் படத்தை முடித்த பிறகு தான் தெரியும்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*