chrome
Apps Apps
switch to mobile site switch to desktop site
தலைப்பு செய்திகள்

தல அஜித்தின் வேதாளம் படத்தின் ஆலுமா டோலுமா டீசர்

In சினிமா செய்திகள்
Updated: 09:50 GMT, Oct 15, 2015 | Published: 09:48 GMT, Oct 15, 2015 |
0 Comments
1939

பெரும் எதிர்பார்ப்பில் அஜீத் – ஸ்ருதிஹாசன் நடிப்பில் வெளிவர இருக்கும் வேதாளம் படத்துக்கு அஜித் ரசிகர்களிடையே புது ட்ரென்டை ஏற்படுத்தியுள்ளது அதன் பாடல் டீசர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்தின் 56-வது படமான வேதாளத்தில் அவரது தங்கையாக லட்சுமிமேனன் நடிக்கிறார். கபீர் வில்லனாக வருகிறார்.

இந்த படத்தின் பாடல் ஒன்று  நடிகர் அஜீத்தின் அட்டகாசமான ஆட்டத்துடன் நேற்று நள்ளிரவில் பாடல் டீசர் வெளியானது. அனிருத் கூறியதைப்போல பாடல் உண்மையிலேயே தர லோக்கல் ரகமாக உள்ளது.

“ஆலுமா டோலுமா” என்று தொடங்கும் இந்தப் பாடலை அனிருத் பாடியிருக்கிறார், படத்தில் அஜீத்தின் ஓபனிங் பாடலாக வரும் இந்தப் பாடலில் தல ஒரு அதிரடியான ஆட்டம் போட்டிருக்கிறார்.

ஜீன்ஸ் + குர்தா போட்டு கண்களில் கூலிங்கிளாஸ் அணிந்து அஜீத் ஆடும் இந்தப் பாடலின் டீசர் 22 நொடிகள் மட்டுமே இருந்தாலும் துள்ளலான இசை, அனிருத்தின் துடிப்பான குரல் மற்றும் அஜீத்தின் ஆட்டம் ஆகியவை காரணமாக இந்த டீசரை ரசிகர்கள் திரும்பத்திரும்ப பார்த்து வருகின்றனர். பாடல் டீசர் வெளியாகி 15 மணி நேரங்களில் இதுவரை 383,937 பேர் டீசரை பார்த்து ரசித்திருக்கின்றனர். மேலும் 35,402 பேர் டீசரை லைக் செய்திருக்கின்றனர்.

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)

*